Sangathy
News

யுக்திய சுற்றிவளைப்பில் 24 மணித்தியாலங்களில் 1,182 பேர் கைது

Colombo (News 1st) இன்று(03) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பினூடாக 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான 44 பேரை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் விசேட பிரிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பட்டியலில் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யுக்திய சுற்றிவளைப்பிற்கு இணையாக குருணாகல் மல்கடுவாவ பண்டாரநாயக்கபுர பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரப்படையினர் குருணாகல் பிராந்தியத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் ​மேற்பட்ட பொலிஸார் இந்த சுற்றிவளைப்பில் பங்கேற்றனர். 

கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

KOICA resumed its WFK volunteer programme in Sri Lanka

Lincoln

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தனின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி சுந்தர் மோகன்

Lincoln

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy