Sangathy
News

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

Afghanistan ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

4.4 மற்றும் 4.8 எனும் ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. 

முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad) நகரத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 80 கிலோமீட்டர் ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, பைசாபாத் நகரத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் 140 கிலோமீட்டர் ஆழத்தில், 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதன்போது, குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

கடந்த ஜனவரி முதலாம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

கடற்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 தமிழக மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுதலை

John David

Customs revenue exceeds Rs. 109 billion in October

John David

Students can use latest digital knowledge hub to find solutions to major economic, agricultural and scientific issues – Prime Minister

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy