Sangathy
News

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்

Colombo (News 1st) உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் பெறப்படும் பணம், குறித்த வழக்குடன் தொடர்புடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வழக்கு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வழக்கு பொருளுக்கு உரிய நபர் வழக்கில் வெற்றி பெற்றால் அந்த பணம் குறித்த நபருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவர் வழக்கில் தோல்வியடைந்தால் அதனை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வழக்கு விசாரணைகளுக்காக நீண்ட காலம் செலவிடப்படுகின்ற காரணத்தினால், பெரும்பாலான வழக்கு பொருட்கள் அழிவடைகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான சட்டத்திருத்தம் விரைவில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயலால் 2000 பேர் பலி; ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

Lincoln

Trump’s Stink

Lincoln

மேற்கு ஆபிரிக்க கடலில் நிர்க்கதியான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy