Sangathy
HealthLatest

பாகற்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்பவரா நீங்கள்..!

கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகவும், மருந்தாகவும் இருக்கின்றது.

பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்குவதுடன், இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பதவும் உதவுகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, முதுமையை தடுக்கின்றது.

பாகற்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் செல்களை வளர்ச்சியடைவதை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வைக்கு நல்லது என்றும், முடி வளர்ச்சி ஊக்குவித்து, முடி உதிர்தலை தடுக்கவும் செய்கின்றது.

பாகற்காயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Related posts

Coronavirus: US reports 1,000 deaths in one day, California passes 4 lakh cases

Lincoln

தந்தை திருட்டு வழக்கில் கைது : அவமானத்தில் பட்டதாரி மகன் தற்கொலை..!

Lincoln

தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு சில டிப்ஸ்…!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy