Sangathy
LatestNewsSrilanka

பெலியத்தையில் ஐவர் படுகொலை விவகாரம் : பிரதான சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்..!

பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் லயன் ரெஜிமண்ட் படைப்பிரிவில் கடமைப்புரிந்த இராணுவ மேஜர் நிஷாந்த டயஸ் என்பவரே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை முழுமையாக வழிநடத்தியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் இராணுவத்தில் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு தகவல்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை வீரர், சம்பவம் இடம்பெற்று 7 நாட்களுக்குப் பிறகு டுபாய் நோக்கி சென்றுள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிதாரியின் மனைவி வெயங்கொடை – பல்லேவெல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக டிஃபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Govt. has got tough with errant job agents – Manusha

Lincoln

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

John David

Nearly month-long joint US Army, SLN exercise in Trinco

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy