Sangathy
News

2023-இல் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு 195 மில்லியன் ரூபா இலாபம்

Colombo (News 1st) ஆயுர்வேத கூட்டுத்தாபனம் கடந்த வருடம் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈட்டப்பட்ட அதிகூடிய  இலாபமாக இந்த தொகை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் மூலிகைச் செடிகளை செய்கையிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

சுதேச மருத்துவ அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் மையப்படுத்தி இந்த தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related posts

கிங், நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

John David

Bureaucracy at Motor Traffic Department stands in way of humanitarian consideration

Lincoln

சர்வதேச நாடுகள் வழங்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy