Sangathy
AmericaLatestNews

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!

மனிதர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழல் இருப்பதாக நம்பப்படும் புதிய கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.

கிரகங்களின் வானியல் தரநிலைகளின்படி, ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை குறித்த கிரகம் சுற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரகமானது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் நாசா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு ஒளி ஆண்டு என்பது 9.7 டிரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்.

பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய இந்த கிரகத்திற்கு ‘Super Earth TOI-715 b’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கிரகத்திற்கும் அதனை அருகிலுள்ள நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் மேற்பரப்பில் நீர் உருவாவதற்கு பொருத்தமான வெப்பநிலையை வழங்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

Related posts

Prez tells Justice Minister to ensure no more breakouts from Kandakadu drug rehab centre

Lincoln

Japan approves dexamethasone as coronavirus treatment

Lincoln

பாராளுமன்ற கூட்டத்தொடர் 24 ஆம் திகதியுடன் நிறைவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy