Sangathy
News

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம்  – நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் மூவருக்கு  ஆறு மாத  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் ஊர்காவற்றுறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த மீனவர்களில் ஒருவர் ஏற்கனவே நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

படகுகளை செலுத்திய இரண்டு மீனவர்களும் GPS கருவியை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் வேண்டுமென்றே படகுகளை செலுத்தியுள்ளதால், அவர்களுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய  20 மீனவர்களையும்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், படகு உரிமையாளர்களை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு  அழைப்புக் கட்டளை விதிக்கப்பட்டு அன்றைய தினம் வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related posts

Poson celebrations at NDB with melodious Bhakthi Gee

Lincoln

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவ வீரர்கள் (Video)

Lincoln

FSP frowns on increases in defence expenditure

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy