Sangathy
LatestTechnology

பேட்டரி விஷயத்தில் மாஸ் காட்டும் ஐபோன் 15..!

ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

“ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது,” என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Related posts

76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்..!

Lincoln

இந்த நடிகையே வேண்டுமென்று அடம் பிடித்து நடிக்க வைத்த கமல்..!

Lincoln

சுவிட்சர்லாந்தில் ரயிலில் கோடரியுடன் பயணித்த மர்ம நபர் : பொலிசார் துரித நடவடிக்கை..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy