Sangathy
India

9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் : கேரளாவை வச்சு செய்யப்போகும் வெயில்..!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரளா மாநிலத்தின் 9 மாவட்டங்களில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கேரள மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை ஒன்பது மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெயில் வாட்டி வதைக்கும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பாலக்காடு மற்றும் கொல்லத்தில் 39 ̊C ஆகவும், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் சுமார் 38 ̊C ஆகவும், திருச்சூரில் சுமார் 37 ̊C ஆகவும், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் சுமார் 36 ̊C ஆகவும் (இயல்புக்கு மேல் 2 முதல் 4 ̊C வரை) இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதமான காற்று காரணமாக இந்த நாட்களில் மலைப்பாங்கான பகுதிகளைத் தவிர குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் அசௌகரியமான வானிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் நிலவரத்துக்கு ஏற்ப மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஹைதராபாத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் நகரின் சாராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் இருக்கும் என்றும் மார்ச் 21 க்குப் பிறகு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் மிக லேசானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளும் நாளை முதல் அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மதுபானம் கொடுத்து மயக்கி பள்ளி மாணவிகள் பலாத்காரம் : இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய வாலிபர்கள் கைது..!

tharshi

“இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” : வாட்ஸ்அப்..!

tharshi

போதை பொருள் கடத்தல் வழக்கு : இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy