Sangathy
India

போதை பொருள் கடத்தல் வழக்கு : இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை..!

போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 2000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதாடர்பாக முதற்கட்டமாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கடந்த மாம் 9 ஆம் தேதி மத்திய போதைப் பொரும் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலருடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. குறிப்பாக தான் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குநரான அமீருடன் ஜாபர் பாதிக்கிற்கு நெருங்கிய நட்பு இருப்பது தெரியவந்தது. மேலும் போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை திரைத்துறையில் முதலீடு செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி மார்ச் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி டெல்லி என்சிபி அலுவலகத்தில் ஆஜரான அமீரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜாபர் சாதிக்கு மற்றும் அமீர் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டதாகவும், பண பரிவர்த்தனை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலையில் 5 அதிகாரிகள் மட்டுமே சோதனையில் ஈடுபட்ட நிலையில் பின்னர் கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பையில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். இதேபோல் சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலக்கத்துறையினரின் இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இந்திய விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Lincoln

கேரளாவில் 21,500 பறவைகளை அழிக்கும் பணி தொடக்கம் : இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை..!

tharshi

மதுபானம் கொடுத்து மயக்கி பள்ளி மாணவிகள் பலாத்காரம் : இன்ஸ்டாகிராமில் பழகி ஏமாற்றிய வாலிபர்கள் கைது..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy