Sangathy
World Politics

ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் : ட்ரம்ப் எச்சரிக்கை..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தன்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யாவிட்டால் இரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில்,

“அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யவில்லை என்றால் இரத்தகளரி ஏற்படும்” என்றார்.

ஆனால் எதற்காக இப்படி ட்ரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில் ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு ட்ரம்ப் கூறியதால், தொழில் துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related posts

Despicable Rightwing  Philosophy propagated by Daily Express news paper

Lincoln

தைவானில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்..!(காணொளி இணைப்பு)

tharshi

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy