Sangathy
Cinema World

ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இவர் ஐபிஎல் மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்..!

அண்மையில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்பாடலில் வேறலெவலில் ரொமான்ஸ் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இவர் ஐபிஎல் மேட்ச் பார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் இவர் கோலிவுட் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார். அண்மையில் ஸ்ருதிஹாசனுடன் இவர் இணைந்து நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மாநகரம்’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் தனது இரண்டாவது படமாக கைதியை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் கதையாக, பாடல் ஹீரோயின் இல்லாத படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இப்படம். ‘கைதி’ படத்தின் மூலமாக கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் லோகேஷ் கனகராஜ். இவர்களது கூட்டணியில் ‘மாஸ்டர்’ படம் வெளியானது.

இதனையடுத்து உலக நாயகன் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தினை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்படம் கோலிவுட் சினிமாவே வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய வசூலை குவித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. கமர்ஷியல் ரீதியான ‘விக்ரம்’ படத்தின் வெற்றி கமலுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் கமல்.

இதனிடையில் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி அமைத்த ‘லியோ’ படத்திற்காக வாய்ஸ் கொடுத்திருந்தார் கமல். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலின் டீசர் அண்மையில் வெளியானது. கமல் இப்பாடலுக்கு லிரிக்ஸ் எழுதியிருந்தார். மிகப்பெரிய அளவில் இந்த டீசர் வீடியோ ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றது.

தனது படங்களிலே காதல் காட்சிகள் வைக்க தெரியாது என ஓபனாக கூறியிருந்த லோகேஷ் கனகராஜ், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலில் வேறலெவலில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். இதனை சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு வைரலாக்கினர் ரசிகர்கள். இதனையடுத்து இந்த முழு ஆல்பம் பாடல் வரும் 25 ஆம் திகதி ரிலீஸ் ஆகயிருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்தது. இங்கு லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்க்க வந்துள்ளனர். இது தொடர்பான போட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தற்போது ஏராளமான கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

Related posts

வாரிசு நடிகருடன் திருமணத்திற்கு தயாராகும் சமந்தா..!

Lincoln

கருங்காலி மாலை மீது நம்பிக்கை இல்ல – அவருக்காக மட்டுமே அணிகிறேன் : லோகேஷ் கனகராஜ்

tharshi

மாரடைப்பில் காலமான டேனியல் பாலாஜி : நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy