Sangathy
Cinema World

அக்ஷய் குமாரின் படே மியன் சோட்டே மியன் : டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

இந்திய திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் “படே மியன் சோட்டே மியன்” திரைப்படத்தின் புது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பூஜா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “படே மியன் சோட்டே மியன்” படத்தின் டிரைலர் மார்ச் 26-ம் திகதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. டிரைலர் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ போஸ்டரில் படே மியன்-ஆக அக்ஷய் குமார் மற்றும் சோட்டே மியன்-ஆக டைகர் ஷெராஃப் மற்றும் மனுஷி சில்லர் மற்றும் ஆல்யா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 10-ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது. ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா, ஆல்யா மற்றும் மனுஷி சில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

Related posts

அஜித் குமார் இல்ல.. என் கணவர் சூர்யா தான் : ஜோதிகா

tharshi

வைரலாகும் ரஜினியின் லால்சலாம் டிரைலர்..!

Lincoln

கருங்காலி மாலை மீது நம்பிக்கை இல்ல – அவருக்காக மட்டுமே அணிகிறேன் : லோகேஷ் கனகராஜ்

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy