Sangathy
Sports

T20 World Cup 2024 : ‘இந்திய உத்தேச அணி’.. 15 பேர் பட்டியல்..!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச அணி குறித்த தகவல் இதோ…

டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26ஆம் திகதி நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

அறிக்கை:

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணித் தேர்வு:

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

விக்கெட் கீப்பர்கள் இடத்திற்கு இஷான் கிஷன், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல், துரூவ் ஜோரல் போன்றவர்களுக்கு இடையில் பலத்த போட்டி இருக்கும் நிலையில், ரிஷப் பந்த், சாம்சன் இருவரையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அறிமுக பௌலர்:

ஐபிஎல் 17ஆவது சீசனில், தொடர்ந்து 150+ வேகத்தில் அபாரமாக பந்துவீசி வரும் மயங்க் யாதவ், 3 போட்டிகளில் 6 எகனாமியில் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இள்ளார். இவரை, சர்பரஸ் தேர்வாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

ரெகுலர் வீரர்கள்:

மற்றபடி ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் போன்ற ரெகுலர் வீரர்கள், அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை (உத்தேச அணி)

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், மயங்க் யாதவ்.

Related posts

Najmul Hossain Shanto century, Mushfiqur Rahim finishing see Bangladesh to victory

Lincoln

Lithium, Ganuka Under 14 boys’ doubles champions

Lincoln

Broad’s triple strike dents Ireland early

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy