Sangathy
World Politics

மூன்று மடங்கு அதிகரித்த இறப்பு எண்ணிக்கை : தலைதூக்கும் டெங்கு – பீதியில் மக்கள்..!

காலநிலை மாற்றத்தினால் பெரு நாட்டில் டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனால், டெங்குவால் பாதிக்கபட்ட இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், பெரு நாட்டில் அவசர ஆணையை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி தினா பொளர்த்.

பெரு நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்குவின் தாக்கமும் பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தென் அமெரிக்க நாட்டின் தரவுகள்படி, பெரு நாட்டில் டெங்குவால் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்காக அவர்கள் இரட்டிப்பான முயற்சி செய்ய தேவைப்படுவதாக கூறியுள்ளது.

அதிகரித்து வரும் டெங்குவால் பெரு நாட்டு ஜனாதிபதி தினா பொளர்த் அங்கு அவசர ஆணையை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அந்நாட்டில் டெங்கு அதிகரிப்பால் ஏற்படக்கூடிய அசாதாரண பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கபடும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது பெரு நாட்டில் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், டெங்கு காய்ச்சலின் லேசான அறிகுறிகளாக குமட்டல், உடலில் தடிப்புகள் ஏற்படுவது, உடல் வலி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திடீரென இப்படி மூன்று மடங்காக அதிகரித்து இருக்கும் இறப்பு எண்ணிக்கை பெரு நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெரு நாட்டின் சுகாதார அமைச்சகம், நேற்று ஒரு நிலவர அறிக்கையை வெளியிட்டது.

அதில், 2023ல் இதே மாதங்களில் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 என இருந்தது. ஆனால், இப்போது இந்த டெங்கு இறப்பு எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக அதிகரித்து 1,35,000 ஆக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் அதிகரித்துவரும் கோசு உற்பத்தியை தடுக்கும் விதமாக பெரு நாட்டின் தலைநகரான லிமாவிலும் அங்கு இருக்கும் மயான நிலையங்களிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் உற்பத்தியாகி வரும் கொசுக்களை அழிக்க கொசு மருந்து அடிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த டெங்கு குறித்து லிமாவில் இருக்கும் தொற்றுநோய் நிபுணர் அகஸ்டோ தரசோனா, காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு கொசு அதன் தன்மையை மாற்றி முன்பைவிட அதிகமாக இனபெருக்கத்தை செய்துவருகிறது என்றார்.

மக்கள்தொகை அடிப்படையில், ஒவ்வொரு ஒரு லட்ச மக்களில் சுமார் 330.27 பேர் இந்த டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் ஏற்பட்ட தொற்று மற்றும் இறப்பு விகிதத்தை விட தற்போது பெரு நாட்டில் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் இது பெரு நாட்டிற்கு மிகவும் நெருக்கடியான சூழல்தான்” என எச்சரித்தார் தோற்றுநோய் நிபுணர் அகஸ்டோ தரசோனா. அதிகரித்துவரும் இந்த டெங்கு நோயால் பெரு நாட்டு மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

 

Related posts

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்..!

Lincoln

Despicable Rightwing  Philosophy propagated by Daily Express news paper

Lincoln

400 வாயில்கள்.. 5 ஓடுபாதைகள்.. உருவாகிறது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy