Sangathy
Cinema World

“கோட்” படத்தில் விஜயகாந்த் – பிரேமலதா வெளியிட்ட தகவல்..!

‘ஏஜிஎஸ்’ பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் ‘கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றுள்ளார். ‘கோட்’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், மறைந்த நடிகர் விஜய்காந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் ‘கோட்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :-

“இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் ‘கோட் ‘ படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சி அமைப்பது குறித்து அனுமதி கேட்டு எங்கள் வீட்டிற்கு 5 அல்லது 6 முறை வந்தார். எனது மகன் சண்முகபாண்டியனிடமும் அவர் பேசினார். நடிகர் விஜய்யும் தேர்தலுக்கு பிறகு என்னை சந்திப்பதாக கூறினார்.

விஜயகாந்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதை உண்டு. அவரது இயக்கத்தில் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், வெங்கட்பிரவுவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். அதனால் இதற்கு சம்மதம் தெரிவிக்க உள்ளேன்” என்றார்.

இந்நிலையில் வருகிற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜய் இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்திப்பார் என கூறப்படுகிறது.

Related posts

மதுரையில் கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம்..!

tharshi

காதல் காமெடியுடன் மார்ச் 29 OTT-யில் வெளியாகும் ‘பிரேமலு’..!

Lincoln

அக்ஷய் குமாரின் படே மியன் சோட்டே மியன் : டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy