Sangathy
Srilanka

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் : எதிர்க்கட்சித் தலைவர்

தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன. இந்த சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை. இவையனைத்தும் அதிகாரம் மற்றும் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஆசையினால் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியில் தானும் அமர்ந்தால் திருடர்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். தான் அவ்வாறு திருடர்களின் தயவில் பதவிகளை ஏற்காததால், திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. தங்கள் நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். இது குறித்து கர்தினால் கூட கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறான வன்முறை செயலையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களையும் தூசிக்கும் மதிப்பில்லாமல், மறந்து செயற்பட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியாளர் திருடர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும், சக கூட்டாளி அரசியல்வாதிகளுடன் நட்புறவு வைத்திருந்தாலும், நாட்டின் 220 இலட்சம் மக்களுடனே தான் நட்புறவு வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பூரண முடியாட்சியை தருவதாகச் சொன்னாலும், டீல் போட மாட்டேன் என்றும், 220 இலட்சம் மக்களுடனே தனக்கு டீல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 161 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​பாடசாலையின் இதர தேவைகளைக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

1994 ஆம் ஆண்டு மாவட்ட அமைப்பாளராக ஆரம்பித்து 2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 20 வருடங்கள், மக்கள் சேவையில் பயிற்சி பெற்றது ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலாகும். முன்னாள் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் மகன் என்ற வகையில் தம்பட்டம் அடித்துக் கொண்டு வாய்ப் பேச்சு வீராப்பால் முறைமையில் மாற்றத்தை கொண்டை வர முடியாது. எனவே தான் அதனை நடைமுறையில் மேற்கொள்ள நினைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாமே.

2019 ஜனாதிபதித் தேர்தலில், பெண்களின் ஆரோக்கியத் துவாய் பிரச்சினைகள் குறித்து பேசும்போது, ​​​அதனை அவமதித்து பேட் மேன் என்று அழைத்தனர். ஆனால் ஸ்காட்லாந்து அனைத்து பெண்களுக்கும், நியூசிலாந்து சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச ஆரோக்கிய துவாய் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன. தன்னை எவ்வளவோ திட்டினாலும் அதனை பொருட்படுத்தாது இதற்காக குரல் எழுப்பியதன் பலனாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மைத்ரிபால சி.ஐ.டியில் ஆஜர்..!

tharshi

மீண்டும் வெங்காய விலையில் மாற்றம்..!

Lincoln

அதுருகிரியவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy