தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்றம் இன்று (24) கூடுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, போதைப்பொருள் வகைகள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.