Sangathy
News

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய டெங்கு ஒழிப்பு நேரம் பிரகடனம்

Colombo (News 1st) ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரதி வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தினார்.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து நிறுவனங்களையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ், முப்படையினர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வௌ்ளிக்கிழமைகளில் காலையில் இரண்டு மணித்தியாலத்தையாவது சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளுக்காக ஒதுக்கிக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் S. ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Related posts

அனைத்து மத ஸ்தலங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை

Lincoln

மந்திகை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

John David

Red Cross raising funds to aid vulnerable communities in Sri Lanka

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy