Sangathy
News

இலங்கையர் சுத்தியலால் அடித்து கொடூரக் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது லண்டன் நீதிமன்றம்

London: லண்டனின் கிழக்கு பகுதியில் இலங்கை பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 50 வயதான ரஞ்சித் கன்கனமலகே (Ranjith Kankanamalage) என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

தலையில் 12 தடவைகள் சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.

தலையில் இரு பக்கங்களிலும் தொடர்ச்சியாக தாக்கியதால், மண்டைஓடு வெடித்ததுடன் மூளையும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேகநபருக்கு நேற்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.

சுயநலத்துடனும் வெறுக்கத்தக்க வகையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ளார்.

தனது மனைவி பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு, கல்வியை தொடர்வதற்காக 50 வயதான ரஞ்சித் கன்கனமலகே பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள  Tower Hamlets கல்லறைக்கு வழமையாக வருகை தரும் ரஞ்சித், அங்கிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது.

சந்தேகநபர் வௌியில் செல்லும் போது சுத்தியல், பிளேட், திருகாணி போன்றவற்றை கையில் எடுத்துச்செல்வதாகவும்,
தீவிர வன்முறையில் அவர் ஆர்வம் மிக்கவர் எனவும் பின்னர் தெரிய வந்ததாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேகநபரின் வீட்டில் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து மேலும் பல வகையான சுத்தியல்கள், ரேஸர்களை கைப்பற்றினர்.

Related posts

Trump’s Stink

Lincoln

கண்டி நகரை அண்மித்து விசேட சுற்றிவளைப்பு

Lincoln

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பிற்போடப்பட்டது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy