Sangathy
News

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் நிறுவனத்தின் சீராய்வு மனு விசாரணை; ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ள MTV Channel நிறுவனம்

Colombo (News 1st) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே ஜோர்ஜ் ஸ்டுவர்ட் (George Steuart ) தனியார் நிறுவனம் சீராய்வு மனு ஊடாக இடைக்கால உத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட MTV Channel தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார்.

ஆவணங்களை சமர்ப்பிக்காது விடயங்களை மறைத்து, நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி, தவறாக வழிநடத்தும் கருத்துகளை வௌியிட்டு இந்த இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

George Steuart Health (Pvt) Ltd நிறுவனம், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று அந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சீராய்வு மனு தொடர்பில் தாம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதாக MTV Channel தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணி இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

MTV Channel தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை George Steuart Health (Pvt) Ltd நிறுவனத்தின் சட்டத்தரணி நிராகரித்ததுடன், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் குறித்த தடையுத்தரவை முறையாக பிறப்பித்துள்ளதாகவும் அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பதாகவும் கூறினார்.

இரண்டு தரப்பினரதும் வாய்மொழி மூல சமர்ப்பணத்திற்கு ஏற்ப, ஜூலை மாதம் 18 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

அத்துடன், ஜூலை மாதம் 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது எதிர்ப்பு சத்தியக்கடதாசியை தாக்கல் செய்வதற்கு George Steuart Health (Pvt) Ltd நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட George Steuart Health (Pvt) Ltd நிறுவனத்தின் சட்டத்தரணி சமர்ப்பித்த மனுவொன்றுக்கு அமைவாக,  MTV Channel தனியார் நிறுவனத்தின் ஆட்சேபனைகளுக்கு உட்பட்டு நீதிமன்றம் தடையுத்தரவை நீடித்தது.

MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி G.G.அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில், நிரஞ்சன் அருள்பிரகாசம், சட்டத்தரணி மியுரு இகலஹேவா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

George Steuart Health (Pvt) Ltd நிறுவனம் சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கமைய, சட்டத்தரணி ருவன்த குரே, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

Related posts

ஸ்ரீ தலதா மாளிகையின் 2023 எசல பெரஹரா உற்சவம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பம்

Lincoln

Mudalige gears for fresh showdown

Lincoln

House Oversight Committee assures probe

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy