Sangathy
News

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தலைவரின் ஆலோசனை

Colombo (News 1st) நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மற்றும் அவர்கள் சார்பாக சாட்சியமளிக்கக்கூடிய நபர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சிறப்பு குழுவிற்கு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்கள் அழைக்கப்பட்ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை ஆவணமொன்றை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியதாக விசேட குழுவின் தலைவர், சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கைகளை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறு பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

SLT share price dips after parliamentary speech on privatization

Lincoln

சமூக செயற்பாட்டாளர் புருனோ திவாகர கைது

Lincoln

டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy