Sangathy
News

1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

Colombo (News 1st) தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, இணை சுகாதார பட்டதாரிகள் குழுவை சுகாதார அமைச்சின் பதவிகளில் உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை நாளை மறுதினம் (15)  முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

Related posts

இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்தால் 2 ஆயிரம் பேர் மரணம்!

Lincoln

மனுக்குமாரன் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஞாயிறு இன்றாகும்

Lincoln

Sun directly overhead Nallur, Paranthan and Chundikkulam at about 12:10 noon today (15)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy