Sangathy
News

இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 19 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

Colombo (News 1st) இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம், இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் எனவும் இலங்கை மக்களுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Indian ships here for exercise

Lincoln

Trump likely to announce his 2024 presidential run within weeks

Lincoln

Lula da Silva sworn in as Brazil president

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy