Sangathy
News

குற்றப்புலனாய்வு திணைக்கள மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று சந்தர்ப்பங்களில் இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த சந்தேகநபர்களான குடு சலிந்து மற்றும் ஹரக் கட்டா ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகிலுள்ள மலசலகூடத்திலிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மேலதிக பரி​சோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச்சென்ற கான்ஸ்டபிள் தங்கியிருந்த காவலரணில்  போதைப்பொருளுக்கு நிகரான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் Milk Tofee தேநீருடன் குறித்த மருந்துகள் கலந்து வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கான்ஸ்டபிள்  தலைமறைவாகியுள்ளார்.

Related posts

US Elections 2020: Four more years? Trump struggles to outline second term plan

Lincoln

Canada pulls 41 diplomats from India amid row over separatist’s killing

John David

பாராளுமன்ற கூட்டத்தொடர் 24 ஆம் திகதியுடன் நிறைவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy