Sangathy
News

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் 57 பேர் பலி

Pakistan: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (29) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

மசூதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பலூசிஸ்தானில் மஸ்துங் (Mastung) மாவட்டத்தில் உள்ள மதினா மசூதி அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதன்போது, மஸ்துங் மாவட்ட பொலிஸ் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்துள்ளார்.

மிலாதுன் நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன.

இந்த தாக்குதல் நடைபெற்று சில மணித்தியாலங்களில்  Khyber Pakhtunkhwa பகுதியின் Hangu நகரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 15 நாட்களில் மஸ்துங் மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

 

Related posts

Colombo (News 1st) மலையக ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்று தலவாக்கலையில் தடம்புரண்டுள்ளது. இன்று மாலை 04.50 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையக ரயில் மார்க்கத்திலான இரவு தபால் ரயில் இன்று தாமதமடையும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Lincoln

அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தம் – சுகாதார அமைச்சர்

Lincoln

முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy