Sangathy
NewsSrilanka

பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் (15) நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று பிற்பகல் 02 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசியலமைப்பின் ஊடாக இதற்கு தீர்வு கண்டுள்ளோம்.

கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல, பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

ராஜபக்ஷர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள். தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்.

அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்தார். அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார்” என்றார்.

Related posts

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 104 பேர் கைது!

Lincoln

SJB demands publication of MPs’ asset declarations

Lincoln

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy