Sangathy
News

உர கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு நிறைவு

Colombo (News 1st) பெரும்போகத்தில் உரக் கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கமநல அபிவிருத்தி  திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.

இதற்காக மேலும் 2,000 மில்லியனை திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.

இந்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி  திணைக்களம் கூறியது.

தற்போது வரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 5,000 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. 

583,372 விவசாயிகளுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிலிருத்தி  திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 50 வீதமானோருக்கு மாத்திரமே இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 1,422 சந்தேக நபர்கள் கைது!

Lincoln

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

Lincoln

Foreign students weigh studying in person vs losing visas

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy