Sangathy
News

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் இன்று (04) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் அத்துடன், 319 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 எனும் இலக்கத்திற்கு அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 எனும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது

Related posts

Farmers warn against releasing 1 mn kilos of rice held at Port

Lincoln

SLUNBA decries ‘parasitic government’ bankrupting industries

Lincoln

AMS warns of chaos in health sector due to new retirement rule

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy