Sangathy
News

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு

Damascus: சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சிரிய இராணுவத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புப் படைப்பிரிவின் உறுப்பினர்கள் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2011 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியதிலிலிருந்து ஈரானின் புரட்சிகர பாதுகாவலர்களின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு சிரியாவில் உள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சியை ஆதரிப்பதற்காக இந்த குழு உள்ளது.

எனினும், தலைநகர் டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்திற்கு அருகிலேயே ஐ.நா.வின் தலைமையகம், தூதரகங்கள் மற்றும் இராணுவ விமான நிலையம் என்பன அமைந்துள்ளன.

இந்த தாக்குதலையடுத்து, தலைநகர் டமாஸ்கஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related posts

Aeroflot to resume flights next week giving ray of hope to battered tourism industry

Lincoln

CEBEU claims power tariffs can be reduced even without restructuring

Lincoln

Parents urged to keep children hydrated

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy