Sangathy
News

65 உக்ரைன் போர் கைதிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்திற்குள்ளானது

74 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. 

Belgorod எனும் பகுதியில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விமானத்தில் பயணித்தவர்களில் 65 பேர் உக்ரேனிய படை வீரர்கள் என பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

பெல்கொரோட்  (Belgorod) ரஷ்ய-உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ளது. 

கடந்த 2022 பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போரில் இந்நகரம் பல முறை தாக்குதல்களுக்கு உள்ளானது.

ரஷ்யாவின்  IL-76 ரக போக்குவரத்து விமானம் ஒன்று, உக்ரைனிலிருந்து ரஷ்யாவால் பிடிக்கப்பட்ட 65 போர் கைதிகளுடன் தென் பெல்கொரோட் பகுதியில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் 65 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

விமானம், பெல்கொரோட் பிராந்தியத்திற்கு தென்கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் Yablonovo கிராமத்தில் விழும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

விபத்திற்குள்ளான IL-76 விமானத்தில்  6 பணியாளர்களும் மேலும் மூவரும் இருந்துள்ளனர். 

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

Related posts

Easter Sunday carnage: Church won’t accept Sirisena’s apology

Lincoln

இழுபறியில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி – இரகசிய வாக்கெடுப்புக்குத் தீர்மானம்

Lincoln

Fonseka loses patience, calls for revival of aragalaya protests

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy