Sangathy
News

மின் கட்டண குறைப்பு தொடர்பான பரிந்துரை அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

Colombo (News 1st) மின் கட்டணத்தை குறைப்பதற்கான தீர்மானத்தை அடுத்த வாரத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு தெரிவிக்கவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை இலங்கை மின்சார சபையினால் நேற்று (22) வழங்கப்பட்டதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

குறித்த யோசனையை மீளாய்வு செய்து தரவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரான பரிந்துரைகளை அடுத்த வாரத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.

சில துறைகளில் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணமானது அதே வீதத்தில் குறைக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்தார்.

வீடுகள், மதவழிபாட்டுத்தலங்கள், அரச அலுவலகங்கள் மற்றும் சுற்றாடல் ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் அதே வீதத்தில் குறைக்கப்படுமென அவர் அறிவித்தார்.

Related posts

George Floyd death: Minnesota lawmakers pass police accountability package, ban neck restraints

Lincoln

இன்று சித்திரா பௌர்ணமி

Lincoln

US imposes sanctions on 3 Chinese officials for human rights violations in Xinjiang

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy