Sangathy
Srilanka

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு..!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவாக விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை ரூ 17,500 வரை அதிகரிப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபா வரை 5,000 ரூபாவால் அதிகரிப்பதற்கும் மற்றும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

சீதுவ பிரதேசத்தில் 27 வயது பெண்ணை கொலை செய்த 22 வயதுடைய நபர் கைது..!

Lincoln

விடுதியொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு..!

Lincoln

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy