Sangathy
Sports

ரோகித் ஆரஞ்சு தொப்பியை வெல்ல கூட வாய்ப்பு உள்ளது : ஸ்ரீசாந்த்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :-

நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும்.

அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார்.

கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

Related posts

A captain’s knock that stands out

Lincoln

Tharusha, Tharindu score centuries

Lincoln

France’s N’Golo Kante ruled out of World Cup with hamstring injury – sources

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy