Sangathy
World Politics

பாகிஸ்தானில் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானிலுள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்திலுள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்திலுள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Srilanka – Looters of the State

Lincoln

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு..!

tharshi

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : 17 பேர் உயிரிழப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy