Sangathy
World Politics

தென்கொரிய பாராளுமன்றத் தேர்தல் : எதிர்க்கட்சி அபார வெற்றி..!

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஜனாதிபதிக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமராவார். அதன்படி ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி சார்பில் ஹான் டக்-சூ பிரதமராக இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவதால் நேற்று முன்தினம் (10) அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

தென்கொரியாவில் மொத்தம் 300 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூட்டணி 189 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் பழமைவாத கட்சி கூட்டணி 111 இடங்களை மட்டுமே வென்றுள்ளன. இதன் மூலம் 5-ல் 3 பங்கு இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது.

எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹான் டக்-சூ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர்கள் பலர் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். முக்கிய தலைவர்கள் பதவி விலகுவது ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் 200 இடங்களை வென்று ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக்கூடிய சூப்பர் மெஜாரிட்டியை அவர்கள் பெறவில்லை. எனினும் மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளிக்க நேரிடும் என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

Related posts

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி..!

tharshi

இஸ்ரேலிடம் இருக்கும் ஒற்றை ஆயுதம்.. சைலண்ட்டாக பின்வாங்கிய ஈரான் : அப்படி என்ன ஆபத்து..?

tharshi

இறந்த அம்மா உடலில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசு : ரஃபா தாக்குதலில் பிறக்கும்போதே குடும்பத்தை இழந்த சோகம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy