Sangathy
Sports

ஐ.பி.எல். 2024 : பும்ரா புதிய சாதனை..!

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25ஆவது லீக் ஆட்டத்தில் 5 முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸை எதிர்கொண்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ஓட்டங்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 21 ஓட்டங்கள் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

Related posts

Gayanthika skips World Championships in search of Asian Games glory

Lincoln

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி? : இன்று மீண்டும் மோதல்..!

tharshi

நீல வர்ணங்களின் மோதல் வெற்றி தோல்வியின்றி நிறைவு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy