Sangathy
World Politics

உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களில் ரஷ்ய தாக்குதல்..!

உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பைக் குறிவைக்கும் விதமாக, அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா நடத்தியது.

ரஷ்யா-உக்ரைன் போா் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைன் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா கடந்த மாதம் முதல் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் பெரும் பகுதிகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.

இந்நிலையில், உக்ரைனின் கீவ், சொ்காஸி மற்றும் சைட்டோமிா் ஆகிய முக்கியப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கி வந்த ‘டிரிபில்ஸ்கா’ மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மின்மாற்றி, டா்பைன்கள், ஜெனரேட்டா்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தொடா் தாக்குதலில், மின் நிலையம் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது.

முதல் ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் மறைவிடத்தில் பதுங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனா் என்று மின் நிலையத்தை நிா்வகிக்கும் நிறுவனத்தின் மேற்பாா்வைக் குழுத் தலைவா் ஆண்ட்ரி கோட்டா கூறினாா்

இத்தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகும், மீட்புப் படையினா் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.தாக்குதலுக்குள்ளான டிரிபில்ஸ்கா ஆலை 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கட்டடங்களுக்கு மின்சாரத்தை வழங்கி வந்தது. தற்போதைய சூழலில் மின்தேவை குறைவாக இருப்பதால் மின்பற்றாக்குறை ஏற்படவில்லை.

எனினும், கோடை காலத்தையொட்டி குளிா்சாதனப் பயன்பாடு அதிகரித்தால், மின் தட்டுப்பாடு கூடிய விரைவில் உணரப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான காா்கிவ் நகரில் பல்வேறு எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், பிராந்தியத்தில் 2,00,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனா் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா தெரிவித்தாா்.

ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் மாஸ்கோவில் தெரிவித்தாா்.

Related posts

மின்சார குக்கரை ‘ஆன்’ செய்த பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு..!

tharshi

மூன்று மடங்கு அதிகரித்த இறப்பு எண்ணிக்கை : தலைதூக்கும் டெங்கு – பீதியில் மக்கள்..!

tharshi

“மூன்றாம் உலகப்போர் மூளும்” : வெற்றியுரையில் புட்டின் சூளுரை..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy