Sangathy
AmericaWorld Politics

ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம் : அமெரிக்கா எச்சரிக்கை..!

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்’ என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் துாதரகமும் சேதமடைந்தது. இரண்டு இராணுவ தளபதிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ஜோ பைடன் கூறியிருப்பதாவது :

“சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும். இந்த தருணத்தில் ஈரானுக்கான தன்னுடைய செய்தி, போர் வேண்டாம். இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமெரிக்காவில் மர்மநபர் கத்திக்குத்து தாக்குதல் : 4 பேர் பலி..!

tharshi

Cops: 14 injured after shooting outside Chicago funeral home

Lincoln

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 12 மீனவா்கள் உயிரிழப்பு : இருவர் மாயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy