மஸ்கெலியா மொட்டிங்ஹேம் தோட்டத்தில் நபர் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை சந்திரகுமார் என்ற குறித்த இளைஞர் தனது தாய் மற்றும் அண்ணனை கோடரியால் சரமாரியாக வெட்டியதோடு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
அவர்கள் தற்போது கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர்வலர்கள் அவரை தடுக்க முயன்ற போது அவர்களையும் குறித்த நபர் தாக்க முற்றட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.