உணவு பிரியர்களை கவரும் வகையில் புதுப்புது உணவு வகைகளை தயாரித்து அவற்றை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நீல நிறத்தில் நெய் சாதம் தயாரிப்பு குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பயனரான பிரதீமா பிரதான் என்பவர் பகிர்ந்த அந்த வீடியோவில், சமையல் கலைஞர் ஒருவர் பட்டாணி பூக்களை கழுவி அதன் இதழ்களை பிரிப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் பட்டாணி பூக்களின் இதழ்களை சேர்ப்பதற்கு முன்பு ஒரு கப் அரிசியை சில நிமிடங்கள் ஊற வைக்கிறார்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை சூடாக்கி மசாலா, வளைகுடா இலை, முந்திரி, திராட்சை, நறுக்கிய வெங்காயம், வெட்டப்பட்ட பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கிறார்.
சில வினாடிகளுக்கு பிறகு அவர் சமைத்த நீல நிற அரிசியை பானையில் சேர்க்க நீல நிற அரிசி, நெய், மசாலா பொருட்களுடன் சேர்ந்து நீல நிறத்தில் நெய் சாதம் தயாராகும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோ 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள், நான் இதை சாப்பிடவே மாட்டேன், இந்த அரிசியை சாப்பிடுவது குற்றம் போல் உணர்கிறோம் என விமர்சித்தனர். அதே நேரம் சில பயனர்கள், இந்த சமையல் நன்றாக உள்ளது.
இதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் ஊதா நிறமாக மாறும் எனவும், மற்றொரு பயனர் மலேசியாவில் நாங்கள் இந்த பூவை பயன்படுத்தி நீல நிற அரிசி சாப்பிடுகிறோம். இதற்கு நாசி கிராபு என்று பெயர் என குறிப்பிட்டிருந்தார்.