செம்மணி புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது.

இதன்போது ‘மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்’ ‘செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்’ ‘உலகமே செம்மணியை மறந்து விடாதே!’ உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மறை மாவட்டத்தின் சாராபாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles