Sangathy
News

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Colombo (News 1st) கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி அடிப்படை விடயங்களை முன்வைப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முர்து பெர்னாண்டோ, P.B.அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் K மலல்கொட மற்றும் E.A.G.R. அமரசேகர ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அமைச்சரவை, திறைசேரி செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் அப்போதைய செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

உர விலையை மேலும் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

Lincoln

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று(31) நாட்டிற்கு விஜயம்

Lincoln

Govt. trying to set up committee to run local councils – Election monitors

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy