Sangathy
News

புனித ஹஜ் பெருநாள் இன்று(29)

Colombo (News 1st) உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்னர்.

இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது.

நபி இப்ராஹிம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம்  மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.

இறை தூதுவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இன்று(29) ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நியூஸ்ஃபெஸ்ட்டின் வாழ்த்துகள்…

Related posts

கரவனெல்ல ஆதார வைத்தியசாலை CT ஸ்கேன் இயந்திரம் செயலிழப்பு

John David

Amazing savings up to 75% for Pan Asia credit/debit Cardholders this festive season

John David

உள்நாட்டில் தயாரிக்கப்படும் Aspirin மாத்திரை தொகுதியொன்று தற்காலிகமாக பாவனையிலிருந்து நீக்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy