Sangathy
News

சாரதிகளின் தவறுகளை தெரிவிக்க விசேட செயலி – இலங்கை போக்குவரத்து சபை

Colombo (News 1st) சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை பரிசோதகர்களால் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பஸ்கள் விபத்திற்குள்ளாகியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக எரந்த பெரேரா தெரிவித்தார்.

 

Related posts

Poverty level will increase sharply in coming months – Ranawaka

Lincoln

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

Lincoln

காலி சிறைக்கு அனுப்பப்படும் கைதிகளை அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy