Sangathy
News

வீதி ஓரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல்

 Colombo (News 1st) வீதி ஓரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு  அவர் பணித்துள்ளார்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகளுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளையும் இந்த நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

Related posts

Putin visits Russian-occupied Mariupol in Ukraine

Lincoln

Weerasekera voted against 22A

Lincoln

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy