Sangathy
News

ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம்: 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Colombo (News 1st) கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு சென்றிருந்தபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
 

Related posts

Musk is now Twitter boss, fires CEO Agrawal, policy chief Vijaya Gadde

Lincoln

60 வீத கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் – சிறைச்சாலைகள் திணைக்களம்

Lincoln

இன்று(26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy