Sangathy
News

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள Google நிறுவனம்

Colombo (News 1st) கூகுள் (Google) நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் நீக்கவுள்ளது.  

கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி Google கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google Photos, Google Maps, Calendar, Google Slides, Google Sheets உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், Google நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள Google கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

பயன்பாட்டில் அல்லாத, செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது கடவுச்சொல் மறந்த Google கணக்குகள் என்பன Cybercrime குற்றங்கள் உள்ளடங்கலாக தவறான முறையில் கையாளப்பட வாய்ப்புள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக  இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதால், கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விபரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயன்படுத்தப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் மாற்று (Recovery) மின்னஞ்சல் முகவரிக்கும் கூகுள் இது தொடர்பாக எச்சரிக்கை செய்தியை அனுப்பி வருகிறது. 

‘Inactive Account Manager’ மூலம், பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத Google கணக்கு மற்றும் அதிலுள்ள தரவுகளை என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்துகொள்ளும் வசதியும், அதன் தரவுகளை பிற Google கணக்குகளுக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. 

பயனர்கள் விரும்பினால் தங்கள் Google கணக்கை முழுமையாக நீக்கும் வசதியும் அதில் உள்ளது.
 

Related posts

மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவிப்பு

John David

சம்பந்தன் – ஜூலி சங் சந்திப்பு; சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Lincoln

வன்முறைகள் வெடித்துள்ள மணிப்பூரில் ஊரடங்கு: கண்டவுடன் சுட உத்தரவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy