Sangathy
NewsSrilanka

தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05) உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தேசிய பிறப்புச் சான்றிதழில் வழங்கப்படும் இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குழந்தை பிறக்கும்போதே அடையாள எண் ஒன்றை வழங்க சந்தர்ப்பம் கிடைக்கும் நிலையில் இதனூடாக மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்கவும் முடியும்.

Related posts

China Development Bank team here to discuss debt related issues

Lincoln

Sri Lanka Insurance launches PETSURANCE

Lincoln

Lula da Silva sworn in as Brazil president

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy